Thursday, November 10, 2016

முத்தைத்தரு பத்தித் திருநகை

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே....

🔯 சரவணபவ 🔯
🔯 முருகா சரணம்

முருகன் 25 ருசிகர தகவல்கள்

முருகன் 25 ருசிகர தகவல்கள்

1. முருகன் அழித்த ஆறு பகைவர்கள் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

2. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும். 1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

3. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

4. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

5. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

6. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

7. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவ மாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

8. முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன் என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

9. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

10. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

11. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

12. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

13. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

14. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

15. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

16. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

17. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

18. முருகப்பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

19. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

20. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

21. முருகப்பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகை யில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள்பாலிக்கிறார்.

22. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

23. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

24. கந்தனுக்குரிய விரதங்கள்: 1. வார விரதம், 2. நட்சத்திர விரதம், 3. திதி விரதம்.

25. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

Kandha Shasti Kavasam

#நேரிசை_வெண்பா
 துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
 பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
 நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
 கந்தர் சஷ்டி கவசம் தனை.

குறள் வெண்பா
 அமரரிடர் தீர வமரம் புரிந்த
 குமரனடி நெஞ்சே குறி

 சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
 சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
 பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
 கீதம் பாடக் கிண்கிணியாட
 மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
 கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
 வர வர வேலாயுதனார் வருக
 வருக வருக மயிலோன் வருக
 இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
 மந்திர வடிவேல் வருக வருக
 வாசவன் மருகா வருக வருக
 நேசக் குறமகள் நினைவோன் வருக
 ஆறுமுகம் படைத்த ஐயா வருக
 நீறிடும் வேலவன் நித்தம் வருக
 சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
 சரவணபவனார் சடுதியில் வருக
 ரகணபவச ரரரர ரரர
 ரிகண பவச ரிரிரி ரிரிரி
 விணபவ சரவண வீராநமோ நம
 நிபவ சரவண நிற நிற நிறென்
 வசர ஹணபவ வருக வருக
 என்னையாளும் இளையோன் கையில்
 பன்னிரண்டாயுதம் பாசங்குசமும்
 பரந்த விழிகள் பன்னிர ண்டிலங்க
 விரைந்தென்னைக் காக்க வேலோன் வருக
 ஐயம் கிலியும் அடைவுடன் சௌவும்
 உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
 கிலியும் சௌவும் கிளரொளி யையும்
 நிலைபெற் றென் முன் நித்தமும் ஒளிரும்
 சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
 குண்டலியாம் சிவகுகன் தினம் வருக
 ஆறுமுகமும் அணிமுடியாறும்

 நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
 பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
 நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும்
 ஈராறு செவியில் இலங்கு குண்டலமும்
 ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
 பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
 நன்மணி பூண்ட நவரத்தினமாலையும்
 முப்புரி நூலும் முத்தணி மார்பும்
 செப்பழகுடைய திருவயிறுந்தியும்
 துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும்
 நவரத்தினம் பதித்த நற்சீராவும்
 இருதொடை யழகும் இணைமுழந்தாளும்
 திருவடியதனில் சிலம்பொலி முழங்க
 செககண செககண செககண செகண
 மொக மொக மொகமொக மொக மொக மொகென
 நகநக நகநக நகநக நகென
 டிகுகுண டிகுகுண டிகுகுண டிகுண
 ரரரர ரரரர ரரரர ரரர
 ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி
 டுடுடுடு டுடுடு டுடுடுடு டுடுடு
 டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
 விந்து விந்து மயிலோன் விந்து
 முந்து முந்து முரகவேள் முந்து
 என்றனை யாளும் ஏரகச் செல்வ
 மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும்
 லாலா லாலா லாலா வேசமும்
 லீலா லீலா லீலா விநோதனென்றும்
 உன் திருவடியை உறுதியென்றெண்ணும்
 என் தலைவைத்துன் இணையடி காக்க
 என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
 பன்னிரு விழியால் பாலனைக் காக்க
 அடியேன் வதனம் அழகுவேல் காக்க
 பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க
 கதிர்வேலிரண்டும் கண்ணினைக் காக்க
 விதிசெவியிரண்டும் வேலவர் காக்க
 நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
 பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
 முப்பத்திருபல் முனைவேல் காக்க
 கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
 என்னிளங்கழுத்தை இனியவேல் காக்க
 மார்பை ரத்தின வடிவேல் காக்க
 சேரிள முலைமார் திருவேல் காக்க
 வடிவேலிருதோள் வளம் பெறக்காக்க
 பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க
 அழகுடன் முதுகை அருள்வேல் காக்க

 பழுபதினாறும் பருவேல் காக்க
 வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
 சிற்றிடையழகுற செவ்வேல் காக்க
 நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
 ஆண் குறியிரண்டும் அயில் வேல் காக்க
 பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க
 வட்டக் குதத்தை வல்வேல் காக்க
 பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க
 ஐவிரலடியினை அருள் வேல் காக்க
 கை களிரண்டும் கருணை வேல் காக்க
 முன் கையிரண்டும் முரண்வேல் காக்க
 பின்கை யிரண்டும் பின்னவள் இரக்க
 நாவிற் சரஸ்வதி நற்றுணையாக
 நாபிக் கமலம் நல்வேல் காக்க
 எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
 அடியேன் வசனம் அசைவுள நேரம்
 கடுகவே வந்து கனகவேல் காக்க
 அரையிருள் தன்னில் அணையவேல் காக்க
 ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க
 தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க
 காக்க காக்க கனகவேல் காக்க
 நோக்க நோக்க நொடியினில் நோக்க
 தாக்க தாக்க தடையறத் தாக்க
 பார்க்க பார்க்க பாவம் பொடிபட
 பில்லி சூனியம் பெரும்பகை அகல
 வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள்
 அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
 பிள்ளைகள் தின்னும் புழங்கடை முனியும்
 கொள்ளிவாற் பேய்களும் குறளைப் பேய்களும்
 பெண்களைத் தொடரும் பிரம்மராட்ச தரும்
 அடியனைக் கண்டால் அலறிக கலங்கிட
 இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
 எல்லிலு மிருட்டிரும் எதிர்ப்படு மன்னரும்
 கனபூசை கொள்ளும் காளியோட னைவரும்
 விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
 தண்டியக் காரரும் சண்டாளர்களும்
 என் பெயர் சொல்லவும் இடி விழுந்தோடிட
 ஆனையடியினில் அரும்பாவைகளும்
 பூனை மயிரும் பிள்ளைகளென்பும்
 நகமும் மயிரும் நீண்முடி மண்டையும்
 பாவைகளுடனே பலகலசத்துடன்
 மனையிற் புதைத்த வஞ்சனை தனையும்
 ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும்
 காசும் பணமும் காவுடன் சோறும்
 ஓதுமஞ் சனமும் ஒருவழிப்போக்கும்

 அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
 மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட
 காலதூ தாள்ளெனைக் கண்டால் கலங்கிட
 அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
 வாய் விட்டலறி மதிகெட்டோடப்
 படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
 கட்டுடனங்கம் கதறிடக் கட்டு
 கட்டியுருட்டு கால் கை முறியக்
 கட்டு கட்டு கதறிடக் கட்டு
 முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
 செக்கு செக்கு செதில் செதிலாக
 சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
 குத்து குத்து கூர் வடிவேலால்
 பற்று பற்று பகலவன் தணலெரி
 தணலெரி தணலெரி தணலதுவாக
 விடு விடு வேலை வெருண்டது ஓட
 புலியும் நரியும் புன்னரி நாயும்
 எலியும் கரடியும் இனித்தொடர்ந்தோட
 தேளும் பாம்பும் செய்யான் பூரான்
 கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம்
 ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க
 ஒளிப்புஞ் சுழுக்கும் ஒருதலை நோயும்
 வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
 சூலை சயம் குன்மம் சொக்குச் சிரங்கு
 குடைச்சல் சிலந்தி குடல்விப் பிhதி
 பக்கப்பிளவை படர்தொடை வாழை
 கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
 பற்குத்தரணை பருஅரையாப்பும்
 எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால்
 நில்லாதோட நீயெனக்கு அருள்வாய்
 ஈரேழுலகமும் எனக்குறவாக
 ஆணும் பெண்ணும் அனைவரும் எ னக்காய்
 மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாக
 உன்னைத் துதித்த உன்திருநாமம்
 சரவணபவனே சைலொளிபவனே
 திரிபுரபவனே திகழொளிபவனே
 பரிபுரபவனே பவமொழிபவனே
 அரிதிருமுருகா அமராபதியைக்
 காத்துத் தேவர்கள் கடும் சிறை விடுத்தாய்
 கந்தா குகனே கதிர்வேலவனே
 கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
 இடும்பனை அழித்த இனியவேல் முரகா
 தணிகாசலனே சங்கரன் புதல்வா
 பழநிப் பதிவாள் பாலகுமரா
 ஆவினன் குடிவாள் அழகிய வேலா

 செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா
 சமரா புரிவாழ் சண்முகத்தரசே
 காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
 என்னா விருக்க யானுனைப் பாட
 எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முரகனைப்
 பாடினே னாடினேன் பரவசமாக
 ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை
 நேசமுடன் யான் நெற்றியில் அணியப்
 பாச வினைகள் பற்றது நீங்கி
 உன்பதம் பெறவே உன்னருளாக
 அன்புடனிரஷி அன்னமும் சொன்னமும்
 மெத்த மெத்தாக வேலா யுதனார்
 சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க
 வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
 வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க
 வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
 வாழ்க வாழ்க மலைக்குறமகளுடன்
 வாழ்க வாழ்க வாரணத்துவசம்
 வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
 எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
 எத்தனை யடியேன் எத்தனை செயினும்
 பெற்றவன் நீகுரு பொறுப்பதுன் கடன்
 பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
 பிள்ளையென் றன்பாய்ப் பிரியமளித்து
 மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித்
 தஞ்சமென்றடியார் தழைத்திட வருள் செய்
 கந்தசஷ்டி கவசம் விரும்பிய
 பாலன் தேவராயன் பகர்ந்ததை
 காலையில் மாலையில் கருத்துடனாளும்
 ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
 நேச முடனொரு நினைவதுமாகி
 கந்தர் சஷ்டி கவச மிதனைச்
 சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
 ஒருநாள் முப்பத்தாறுரு கொண்டு
 ஓதியே செபித்து உகந்து நீறணிய
 அஷ்ட திக்குள்ளோர் அடங்கலும் வசமாய்
 திசைமன்ன ரென்மர் செயலதருள்வர்
 மாற்றலாரெல்லாம் வந்து வணங்குவர்
 நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும்
 நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர்
 எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர்
 கந்தர் கை வேலாம் கவசத்தடியை
 வழியாய் காண மெய்யாய் விளங்கும்
 வழியாய் காண மெய்யாய் விளங்கும்
 விழியாற் காண வெருண்டிடும் பேய்கள்
 பொல்லாதவரைப் பொடிப்பொடியாக்கும்
 நல்லோர் நினைவில் நடனம் புரியும்
 சர்வசத்துரு சங்காரத்தடி
 அறிந்தெனதுள்ளம் அஷ்டலெக்சுமிகளில்
 வீரலட்சுமிக்கு விருந்துணவாக
 சூரபத்மாவைத் துணித்தகையதனால்
 இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
 குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும்
 சின்னக் குழந்தை சேவடி போற்றி
 எனைத் தடுத்தாட் கொள் என்றன துள்ளம்
 மேவிய வடிவுறும் வேலவா போற்றி
 தேவர்கள் சேனாபதியே போற்றி
 குறமகள் மனமகள் கோவே போற்றி
 திறமிகு திவ்விய தேகா போற்றி
 இடும்பாயுதனே இடும்பா போற்றி
 கடம்பா போற்றி கந்தா போற்றி
 வெற்றி புனையும் வேலே போற்றி
 உயர்கிரி கனகசபைக்கோர் அரசே
 மயில் நடமிடுவோய் மலரடி சரணம்
 சரணம் சரணம் சரவணபவஓம்
 சரணம் சரணம் சண்முகா சரணம்

முருகன் காயத்திரி மந்திரங்கள்

தத்புருஷாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
ஸனத்குமாராய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்
மஹாஸேனாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்
ஷண்முகாய வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தன்ன: குருகுஹ ப்ரசோதயாத்
சரவணபவாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்
ஷண்முகாய வித்மஹே மஹாஸேனாய தீமஹி
தன்ன: ஷஷ்ட ப்ரசோதயாத்
மஹாஸேனாய வித்மஹே வாக்விசுத்தாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்
மஹாஸேனாய வித்மஹே ஷடானனாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்
தத்குமாராய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்
கார்த்திகேயாய வித்மஹே சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்ன ஸ்கந்த ப்ரசோதயாத்
காங்கேயாய வித்மஹே கார்த்திகேயாய தீமஹி
தன்ன: ஷண்முக ப்ரசோதயாத்
ஞானஸ்கந்தாய  வித்மஹே ஸ்வாமினாதாய தீமஹி
தன்ன: சிவகுரு ப்ரசோதயாத்
ஸ்வாமிநாதாய வித்மஹே சிவகுருநாதாய தீமஹி
தன்ன:குருகுஹ ப்ரசோதயாத்
சக்தி ஹஸ்தாய வித்மஹே குக்குடத்வஜாய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்
ஸுப்ரமண்யாய வித்மஹே ஞானஸ்கந்தாய தீமஹி
தன்ன: குஹ ப்ரசோதயாத்.

தேவசேனை

அம்ருத வல்யை ச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
இந்திர புத்ரியைச வித்மஹே தேவஸேனாயை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
மஹாதேவ்யை ச வித்மஹே க்ரியா சக்த்யை ச தீமஹி
தன்ன: தேவஸேனா ப்ரசோதயாத்.

வள்ளி

ஸுந்தர வல்யை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
நம்பிராஜ தனயாயை ச வித்மஹே மஹாவல்யை ச தீமஹி
தன்ன: ஸ்கந்த பத்னி ப்ரசோதயாத்
மஹாதேவ்யை ச வித்மஹே இச்சாசக்த்யை ச தீமஹி
தன்ன: வல்லி ப்ரசோதயாத்.

வேல்

அசிந்த்ய சக்த்யை ச வித்மஹே ஞான சக்த்யை ச தீமஹி
தன்ன: சக்த்யை ப்ரசோதயாத்.

மயில்

சுக்ல பாங்காய வித்மஹே பக்ஷிராஜாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்
வேதஸ்வரூபாய வித்மஹே இந்த்ரஸ்வரூபாய தீமஹி
தன்ன: மயூர ப்ரசோதயாத்
நீலகண்டாய வித்மஹே ப்ரணவஸ்ரூபாய தீமஹி
தன்ன; மயூர ப்ரசோதயாத்

சேவல்

அக்னிஸ்வரூபாய வித்மஹே ப்ரணவாகாராய தீமஹி
தன்ன: குக்குடத்வஜ ப்ரசோதயாத்
குக்குடத்வாஜாய வித்மஹே ப்ரணவாகாரய தீமஹி
தன்ன: ஸ்கந்த ப்ரசோதயாத்.

chamundeshwari
ஓம் ஶ்ரீ சாமுண்டயே நம:

ஸ்வாமியே சரணம் ஐயப்பா

பதினெட்டு படிகளின் தத்துவம் :

1) ஐயப்பன் தன்னுடைய 18 கருவிகளைக் கொண்டு 18 படிகளை உருவாக்கியதாக கூறப்படுகிறது அந்த 18 கருவிகள்

வில்
வாள்
வேல்
கதை
அங்குசம்
பரசு
பிந்திபாவம்
பரிசை
குந்தம்
ஈட்டி
கை வாள்
முன்தடி
கடுத்தி வை
பாசம்
சக்கரம்
ஹலம்
மழு
முஸலம்

ஆகிய 18 போர்க் கருவிகள் ஆகும்

2) பதினெட்டுப் படிகளை

இந்திரியங்கள் ஐந்து ( 5 )
புலன்கள் ஐந்து ( 5 )
கோசங்கள் ஐந்து ( 5 )
குணங்கள் மூன்று ( 3 )

என்று கூறுகிறார்கள் அவை முறையே

இந்திரியங்கள் ஐந்து ( பஞ்சேந்திரியம் ) :

கண்
காது
மூக்கு
நாக்கு
கை கால்கள்

புலன்கள் ஐந்து ( ஐம்புலன்கள் ) :

பார்த்தல்
கேட்டல்
சுவாசித்தல்
ருசித்தல்
ஸ்பரிசித்தல்

கோசங்கள் ஐந்து ( பஞ்ச கோசங்கள் ) :

அன்னமய கோசம்
ஆனந்தமய கோசம்
பிராணமய கோசம்
மனோமய கோசம்
ஞானமய கோசம்

குணங்கள் மூன்று ( த்ரி குணங்கள் ) :

ஸத்வ குணம்
ரஜோ குணம்
தமோ குணம்

இந்த பதினெட்டையும் கட்டுப் படுத்தியோ ஜெயித்தோ வாழ பதினெட்டுப் படிகளை ஏற வேண்டும்

3) 18 படிகள் 18 வகை தத்துவங்களை குறிப்பதாகவும் கூறுகிறார்கள்

மெய்
வாய்
கண்
காது
மூக்கு
சினம்
காமம்
பொய்
களவு
சூது
சுயநலம்
பிராமண
க்ஷத்திரிய
வைசிய
சூத்திர
ஸத்ய
தாமஸ
ராஜஸ

என்ற 18 வகை குணங்களை தாண்டினால் பகவான் ஐயப்பனைக் காணலாம்

4) கோயிலைச் சுற்றியுள்ள 18 மலை தெய்வங்களை குறிப்பதுதான் 18 படிகளாகும்

18 படிகளில் வாஸம் செய்யும் தேவதாக்கள்

ஒன்றாம் திருப்படி : சூரிய பகவான்
இரண்டாம் திருப்படி : சிவன்
மூன்றாம் திருப்படி : சந்திர பகவான்
நான்காம் திருப்படி : பராசக்தி
ஐந்தாம் திருப்படி : அங்காரக பகவான்
ஆறாம் திருப்படி : முருகன்
ஏழாம் திருப்படி : புத பகவான்
எட்டாம் திருப்படி : விஷ்ணு
ஒன்பதாம் திருப்படி : வியாழ ( குரு ) பகவான்
பத்தாம் திருப்படி : பிரம்மா
பதினொராம் திருப்படி : சுக்கிர பகவான்
பனிரெண்டாம் திருப்படி : இலட்சுமி
பதிமூன்றாம் திருப்படி : சனி பகவான்
பதிநான்காம் திருப்படி : எம தர்ம ராஜன்
பதினைந்தாம் திருப்படி : இராகு பகவான்
பதினாறாம் திருப்படி : சரஸ்வதி
பதினேழாம் திருப்படி : கேது பகவான்
பதினெட்டாம் திருப்படி : விநாயகப் பெருமான்

( இதில் கவனிக்கப்பட வேண்டியவை ஒற்றைப்படை வரிசையில் நவக்ரஹ தேவதாக்களும் இரட்டைப்படை வரிசையில் தெய்வக் குடும்பமும் வாஸம் செய்வதாக ஐதீகம் )

எனவேதான் படிபூஜை சபரிமலையில் சிறந்த முறையில் செய்யப்படுகிறது படிபூஜை நடைபெறும் தினத்தன்று 18 படிகளை பூக்களாலும் ; விளக்குகளாலும் அலங்கரித்து அவற்றிற்கு கீழே 18 படி ஏறுமிடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளி கலசங்களை வைத்து படிபூஜை செய்வார்

ஒவ்வொரு படியிலும் பீடபூஜையும் ; மூர்த்தி பூஜையும் நடத்துவார் பிறகு 18 படிகளுக்கும் கலசாபிஷேகம் நடைபெறும் நீராஞ்சன தீபம்
( தேங்காயை இரண்டாக உடைத்து அதன் மூடியில் நெய் ஊற்றி ஏற்றப்படுவது ) காண்பிப்பார் படிபூஜைக்கு உபயோகப்படுத்தும் பொருட்கள் அனைத்தும் வெள்ளியால் செய்யப்பட்டவையாகும்

18 படிகளும் வெள்ளி மற்றும் பித்தளை விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருக்கும்
நைவேத்யம் காட்டிய பின் பிரசன்ன பூஜை செய்வார் பிறகு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காண்பிக்கப்பட்டு சபரிமலை பிரதான தந்திரியும் மேல்சாந்தியும் மற்றும் சில பக்தர்களும் படியேறிச் செல்வார்கள் பிறகு சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணப் பாயசம் நைவேத்யம் செய்து தீபாராதனை காண்பிப்பார்கள்

5) 18 படிகளிலும் ஐயப்பன் 18 வகையான திருநாமங்களுடன் அமர்ந்திருப்பதாக ஒரு வரலாறு கூறுகிறது அவை என்னவென்றால்

ஒன்றாம் திருப்படி : குளத்துப்புழை பாலகன்
இரண்டாம் திருப்படி : ஆரியங்காவு ஐயன்
மூன்றாம் திருப்படி : எரிமேலி சாஸ்தா
நான்காம் திருப்படி : அச்சன்கோயில் அரசன்
ஐந்தாம் திருப்படி : புவனேஸ்வரன்
ஆறாம் திருப்படி : வீரமணி கண்டன்
ஏழாம் திருப்படி : பொன்னம்பல வாஸன்
எட்டாம் திருப்படி : மோஹினி பாலன்
ஒன்பதாம் திருப்படி : சிவ புத்ரன்
பத்தாம் திருப்படி : ஆனந்த சித்தன்
பதினொன்றாம் திருப்படி : இருமுடிப் பிரியன்
பனிரெண்டாம் திருப்படி : பந்தள ராஜகுமாரன்
பதிமூன்றாம் திருப்படி : பம்பா வாஸன்
பதினான்காம் திருப்படி : வன்புலி வாஹனன்
பதினைந்தாம் திருப்படி : ஹரிஹர சுதன்
பதினாறாம் திருப்படி : ஸத்குரு நாதன்
பதினேழாம் திருப்படி : பிரம்மாண்ட நாயகன்
பதினெட்டாம் திருப்படி : ஸத்ய ஸ்வரூபன்

6) 18 மலை தேவதைகளை வழிபாடு செய்வதற்காகத்தான் படிபூஜை நடத்துகிறார்கள் அவை என்னவென்றால்

சபரி மலை
பொன்னம்பல மேடு
கவுண்ட மலை
நாக மலை
சுந்தர மலை
சிற்றம்பல மேடு
கல்கி மலை
மாதங்க மலை
மைலாடும் மலை
ஸ்ரீ மாத மலை
தேவர் மலை
நீலக்கல் மலை
தலப்பாறை மலை
நீலி மலை
கரி மலை
புதுச்சேரி
அப்பாச்சி மேடு
இஞ்சிப் பாறை

7) 18 படிகளும் ஒரே கல்லினால் ஆனது எல்லாப் படிகளும் 9 அங்குல உயரமும் 5 அடி நீளமும் உடையதாகும் தேங்காய் உடைத்துப் படிகள் தேய்வதைத் தடுக்கும் பொருட்டு திருவாங்கூர் தேவஸ்தானம் 1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் பஞ்ச லோகத்தினால் ( தங்கம் ; வெள்ளி ; பித்தளை ; செம்பு ; ஈயம் )
தகடு செய்து படிகளின் மேல் அமைத்துள்ளனர் தற்போது 2015ல் மறுபடியும் தகடுகள் சிதிலமடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2015 புது கவசம் படிகளுக்கு சாத்தப்பட்டது

8) பதினெட்டின் சிறப்புகள் :

பகவத் கீதை அத்தியாயங்கள் 18
குருக்ஷேத்ர யுத்தம் நடந்த நாட்கள் 18
புராணங்களின் எண்ணிக்கை 18
ஐயப்பனின் போர்க் கருவிகள் 18
ஐயப்பனின் தத்துவ குணங்கள் 18
சரணம் விளிக்கும் முறைகள் 18
சித்த புருஷர்கள் 18
சபரியை சுற்றியுள்ள மலைகள் 18
சபரியில் அமைந்துள்ள திருப்படிகள் 18

9) 18 படிகளில் இருமுடிக் கட்டு இல்லாமல் படியேறி வர சிலருக்கு மட்டுமே உரிமையுண்டு அவர்கள்

பந்தள ராஜ குடும்பத்தினர்

தந்திரிகள்

மகர சங்கராந்தியன்று திருவாபரணப் பெட்டியை சுமந்து வரும் ராஜ பிரதிநிதி

திருவாபரணப் பெட்டியையும் தங்க அங்கியையும் வரவேற்கும் தேவஸ்தான உறுப்பினர்கள் ( வரவேற்கும் சமயத்தில் இவர்கள் ஐயப்பன் அனுமதி பெற்று மாலையணிந்திருக்க வேண்டும் )

படிபூஜையின் போது மேல்சாந்தி / தந்திரி / கீழ்சாந்தி மற்றும் கட்டளைதாரர் 3 பேர்

பலிகளை அர்ப்பணிக்கும் குருக்கள்

10) சரணம் விளிக்கும் முறைகள் 18 :

1) உறவுமுறைச் சரணம் :
 ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஐங்கரன் ஸோதரனே சரணம் ஐயப்பா
ஷண்முகன் ஸோதரனே சரணம் ஐயப்பா

2) பஞ்சபூத சரணம் :
மகர நட்சத்திரமே சரணம் ஐயப்பா ( ஆகாயம் )
காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா ( நெருப்பு )
அழுதா நதியே சரணம் ஐயப்பா ( நீர் )
பம்பையின் தென்றலே சரணம் ஐயப்பா ( காற்று )
கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா ( நிலம் )

3) இடப்பெயர் சரணம் :
அச்சன்கோவில் அரசனே சரணம் ஐயப்பா
ஆரியங்காவு ஐயனே சரணம் ஐயப்பா
குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
எரிமேலி சாஸ்தாவே சரணம் ஐயப்பா

4) அனுக்ரஹ சரணம் :
ஆபத்பாந்தவனே சரணம் ஐயப்பா
அனுக்ரஹ மூர்த்தியே சரணம் ஐயப்பா
அனாதரக்ஷகனே சரணம் ஐயப்பா
அழைத்தால் ஓடிவரும் அண்ணலே சரணம் ஐயப்பா

5) ப்ரிய சரணம் :
கற்பூர ப்ரியனே சரணம் ஐயப்பா
இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
பாதயாத்திரை ப்ரியனே சரணம் ஐயப்பா
பானக ப்ரியனே சரணம் ஐயப்பா
பாயசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
நாம சங்கீர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா

6) காக்கும் சரணம் :
காத்து ரக்ஷிக்க வேண்டும் பகவானே சரணம் ஐயப்பா
ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
காவல் தெய்வங்களே சரணம் ஐயப்பா

7) நட்பு சரணம் :
வாவரின் தோழனே சரணம் ஐயப்பா
பெரிய கருப்பண்ண ஸ்வாமியே சரணம் ஐயப்பா
கடுத்த ஸ்வாமியே சரணம் ஐயப்பா

8) போற்றி சரணம் :
வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
குருவுக்கும் குருவே சரணம் ஐயப்பா

9) பிற தெய்வ சரணம் :
குருவாயூரப்பனே சரணம் ஐயப்பா
ஏத்தமானூர் அப்பனே சரணம் ஐயப்பா
சோட்டாணிக்கரை பகவதியே சரணம் ஐயப்பா

10) குண சரணம் :
உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
சற்குணசீலனே சரணம் ஐயப்பா

11) செயல் சரணம் :
ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா

12) வெற்றி சரணம் :
மகிஷி மர்த்தனனே சரணம் ஐயப்பா
புலிப்பால் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
வெற்றியைத் தருபவனே சரணம் ஐயப்பா

13) பம்பை சரணம் :
பம்பையில் உதித்தவனே சரணம் ஐயப்பா
பம்பையில் ஸ்நானமே சரணம் ஐயப்பா
பம்பையில் சக்தியே சரணம் ஐயப்பா
பம்பா நதி தீர்த்தமே சரணம் ஐயப்பா
பம்பா விளக்கே சரணம் ஐயப்பா

14) உருவ சரணம் :
யோக பட்டதாரியே சரணம் ஐயப்பா
சின்முத்ரா தாயகனே சரணம் ஐயப்பா
நித்ய ப்ரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
தத்வமஸி தாயகனே சரணம் ஐயப்பா

15) நீண்ட சரணம் :
ஸ்வாமியேய்ய்ய்ய்ய்ய்ய் சரணம் ஐயப்பா
ஜோதி ஸ்வரூபனே சரணம் ஐயப்பா

16) சாஸ்தா சரணம் :
பால சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆதி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
பிரம்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விப்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஸ்வ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
விஜய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மோஹன சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஞான சாஸ்தாவே சரணம் ஐயப்பா
யோக சாஸ்தாவே சரணம் ஐயப்பா
குபேர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
காள சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கிராத சாஸ்தாவே சரணம் ஐயப்பா
கல்யாண சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ருத்ர சாஸ்தாவே சரணம் ஐயப்பா
மகாராஜ சாஸ்தாவே சரணம் ஐயப்பா
சந்தான ப்ராப்தி சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஆர்ய சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஸ்ரீ தர்ம சாஸ்தாவே சரணம் ஐயப்பா

17) பதினெட்டாம்படி சரணம் :
ஒன்னாம் திருப்படியே சரணம் ஐயப்பா
இரண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
மூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
நான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஐந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஆறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஏழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
எட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
ஒன்பதாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பத்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினொன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பனிரெண்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிமூன்றாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதிநான்காம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினைந்தாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினாறாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினேழாம் திருப்படியே சரணம் ஐயப்பா
பதினெட்டாம் திருப்படியே சரணம் ஐயப்பா

18) மன்னிப்பு சரணம் :
ஸமஸ்தாபராத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
ஓம் அறிந்தும் அறியாமலும் தெரிந்தும் தெரியாமலும் செய்த ஸகல குற்றங்களையும் பிழைகளையும் பொறுத்து காத்து ரக்ஷிக்க வேண்டும் ஓம் ஸ்ரீ ஸத்யமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளிவீரன் வீரமணிகண்டன் காசி இராமேஸ்வரம் பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம் ஸ்ரீ ஹரிஹரசுதன் ஆனந்தசித்தன் ஐயன் ஐயப்ப ஸ்வாமியே சரணம் ஐயப்பா

திருசெந்தூர் பன்னீர் இலை விபூதி

திருசெந்தூர் முருகன் கோவில் பன்னீர் இலை விபூதி :

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்....
என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.
ஆதி சங்கரர் இந்த இலை விபூதியை உண்டு காச நோயை நீக்கிக்கொண்டதாகவும், அதனாலேயே அவர் ஸ்ரீசுப்பிரமணிய புஜங்கம் பாடியதாகவும் கூறப்படுகிறது.
இன்றும் இந்த விபூதி இலை தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது. திருசெந்தூர் செல்பவர்கள் இதை தவறரது பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை பக்தர்களுக்குத் தரும்போது, பன்னீர் இலையில் தான் தருவார்கள். முருகன் ஒருபக்கத்திற்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் கொண்டவன்.
அது போலவே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என ஈராறு பனிரெண்டு நரம்புகள் இருக்கும். பன்னீருக்கரத்தான் முருகனை சென்று வணங்கும் பக்தர்களுக்கு அவன் தனது பன்னீருதிருக்கரங்களாலேயே இங்கு விபூதி, சந்தன பிரசாதத்தை வழங்குவதாக ஐதீகமாகும். அதனால் இது பன்னீர் செல்வம் என்று பக்தர்களால் சொல்லப்படுகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு பன்னீ(னி)ரு இலை விபூதி பிரசாதம் காலம் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இலை விபூதியின் மகத்துவம் ;
அபிநபகுப்தர் என்ற சித்தர் ஒருவர் கெடுதல் செய்யும் நோக்கத்தில் ஆதிசங்கரருக்கு செய்வினை, ஏவல், பில்லி, சூனியம் செய்தார். இதனால் சூலைநோய் உள்பட பல்வேறு நோய்களுக்கு ஆதிசங்கரர் உட்பட்டார். மனமுடைந்த ஆதிசங்கரர் இறைவனை நாடி மனமுறுக வேண்டினார். இருந்தும் அவருக்கு நோய் குணமாகவில்லை. அவர் ஒவ்வொரு கோவிலாக சென்று இறுதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிக்கு வந்து மனமுறுக வேண்டினார். அப்போது ஆதிசங்கரர் கையில் பன்னீரு இலை விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதத்தை உடலில் பூசிக், அதை உள்கொண்டார். சில நாட்களில் அவரை தொற்றி இருந்த நோய்கள் அனைத்தும் முற்றிலும் குணமடைந்தது.
அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மீது அதிக பற்று கொண்டு மனமுறுகி 32 பாடல்கள் கொண்ட சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அந்த 32 பாடல்களும் கோவிலில் சிறப்பு, சுவாமியின் பெருமை போன்றவை குறித்து இருந்தது. அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி பெருமை பட பாடினார்.
சுப்பிரமண்யா! நின் இலை விபூதிகளை கண்டால் கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய நோய்கள் நீங்கும். பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விடும் என்று சுப்பிரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர் செல்லி இருக்கிறார்.
பன்னீர் இலை என்பதற்கு அர்த்தம். இலையில் மொத்தம் 12 நரம்புகள் இருக்கும். முருக பெருமான் தனது 12 கரங்களால் இந்த பிரசாதத்தை வழங்கியதால் இந்த பன்னீர் இலையில் முருக பெருமானின் பன்னிரு கைகள் போன்று இருக்கும். பன்னிரு இலை என்ற பெயர் காலப்போக்கில் மருவி பன்னீர் இலை என்று கூறப்படுகிறது.
முருக பெருமானை பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து இருந்த பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாக கருதப்படுகிறது.
இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வேறு எந்த கோவிலிலும் இல்லாத சிறப்பாக திருச்செந்தூர் கோவிலில் இந்த இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
இந்த இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும்.
1.பன்னீர் இலையில் உள்ள பூவில் உள்ள சாந்த குண சக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்குச் சில நன்மைகளைத் தருகிறது என்று சித்தவைத்தியம் கூறுகிறது.
2.இறைவனுடைய பூஜைக்குறியது துளசி வில்வ இலை, வன்னி இலை. அதே போல் இறைவனுடைய பூஜைக்குரியதாகப் பன்னீர் இலை உள்ளது.
3.பன்னீர் இலையில் உள்ள 12 நரம்புகள் முருகப்பெருமானின் பன்னிரு திருக்கரங்களுச் சமம் என்று கூறுவர். 4.திருவாடுதுறை திருப்பனந்தாள் குரு மகாசந்நிதானங்கள் நடராஜப் பெருமானை வணங்குவோர்க்குப் பன்னீர் இலையில் விபூதிப் பிரசாதம் வழங்கி வருகிறார்கள்.
5.திருநீற்றைப்ப பன்னீர் இலையில் பத்திரமாக வைத்துக் கொள்வது செல்வத்தைச் சேமிப்பது போலாகும் என்று பக்தர்கள பன்னீர் இலை வீபூதியைப் பக்தியுடன் பத்திரமாக வைத்துக் கொள்கிறார்கள்.
6.பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். அருளாளர் ஆதிசங்கரர் நோய் நீக்கும் உண்மையையும் பெருமையையும் வல்லமையையும் தனது பாடல்களில் எடுத்தியம்புகிறார். 7.பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி அணிந்து கொள்கிறார்கள். ஆடு, மாடுகள் நோய் கண்டால் நோய் நீங்க வழிபட்டுப் பன்னீர் இலை விபூதியினை மருந்தாகக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்திகிறார்கள். பன்னீர் இலை விபூதியினை மருந்தாக் கொடுத்து நோய் நீங்கியதும் திருச்செந்தூர் முருகனுக்குக் காணிக்கையாக ஆடு மாடுகளைச் செலுத்துகிறார்கள். பன்னீர் இலையும் நற்சந்தனமும் பக்தர்களுக்கு வழங்கபபடுகிறது.
"அபஸ்மார குஷ்டக்ஷ்யார்ச ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந் தஹ
பிசாசஸ்ச சர்வே பவத் பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே"
பொருள்
"தாரகாசுரனை வதம் செய்தவனே! வலிப்பு, காசம், குஷ்டம், சுரம், மேகவெட்டை, குடல்புண், புற்றுநோய், பிசாசு மற்றும் மனப்பயம் எனும் நோய்களனைத்தும் பன்னீர் இலையில் வைத்துத் தரப்படும் உன் திருநீற்றைப் பார்த்த மாத்திரத்தில் பறந்தோடி மறைந்துவிடும்."
ஆதி சங்கரர், திருச்செந்தூரில் பாடிய சுப்ரமண்ய புஜங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். பார்த்த மாத்திரத்திலேயே நோய்களைப் பறக்கடிக்கும் என்று அவர் குறிப்பிடும் 'பத்ர பூதி' என்பது என்ன?
விபூதியின் வரலாறு
'பத்ர' என்பது இலை. பூதி என்பது நீறு. செந்திலாண்டவன் திருக்கோயிலில் இறைவனது பிரசாதமாகிய திருநீறு, பன்னீர் இலையில் வைத்துத் தரப்படுகிறது. இதன் மணமே தனித்தன்மை உடையதாக இருக்கும்.
இலையினால் விபூதியின் மணம் இன்னும் அதிகரிக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது. என்னவானாலும் சரி, இலை விபூதியில் செந்திலாண்டவனின் அருள் மணம் வீசுகிறது என்பதுதான் நிஜம்.
இலை விபூதியின் வரலாறு, என்னவென்று பார்ப்போம். செந்தூரில் சூரபத்மாதியர்களை ஒடுக்கிவிட்டு கடற்கரையில் கலங்கரை விளக்கம் போன்று ஒளி வீசி நின்றான் முருகப் பெருமான். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.
எனவே இவற்றின் இலைகளும் வேத மந்திர சக்தியை உடையவை என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றன.தவிர, பன்னீர் இலையில் காணப்படும் 12 நரம்புகள் முருகனது பன்னிரு கரங்களை நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன.
தாடகை எனும் பெண்ணை ராமபிரான் மூலமாக வதம் செய்த காரணத்தினால் தனக்கு ஏற்பட்ட குன்மம் முதலான நோய்கள் தீர, ராமபிரான் தன் கனவில் கூறியபடி, செந்திலாண்டவன் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விசுவாமித்திர மகரிஷி.
ஆதி சங்கரரும் செந்திலாண்டவனின் நீறும்
ஆதி சங்கரரது வாழ்விலும் இலை விபூதி மகிமையை விளக்குவதான ஒரு சம்பவம் ஏற்பட்டது. அவருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர் என்பவர், ஆபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார்.
அக்காலத்தில் அவர் வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்தார். ஒரு நாள் இரவு, இறைவன் அவர் கனவில் தோன்றி, "என் குமாரன் ஷண்முகன் குடியிருக்கும் புண்ணியத் தலமான செயந்திபுரம் எனும் திருச்செந்தூர் சென்று அவனைத் தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்" என்று கூறினார். உறங்கி எழுந்து பார்த்த சங்கரரின் அருகில் விபூதி இருந்தது.
கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, செந்தூர் வந்தடைந்தார், ஆதிசங்கரர். கடலில் நீராடி, பின் இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, ஆதிசேஷனாகிய பாம்பு ஊர்ந்து ஊர்ந்து இறைவன் சன்னதியை அடைந்ததைக் கண்டார். அதே நேரம் அவருக்கும் இறை தரிசனம் கிட்டியது.
அவன் அருளாலே, மடை திறந்த வெள்ளம் போல அவர் திருவாயிலிருந்து சுலோகங்கள் வெளிவந்தன. வடமொழியில் பாம்பைப் புஜங்கம் என்பர். வடமொழி இலக்கணப்படி, புஜங்க விருத்தமாக அமைந்தன பாடல்கள். பாடி முடித்து இலை விபூதியைப் பெற்று அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று.
தெய்வ அவதாரமாகக் கருதப்படும் ஆதிசங்கரர் நினைத்திருந்தால், தானே நோயை விரட்டி இருக்க முடியும்.ஆனால் மானுட அவதாரத்தில், அத்துயரை, தானே அனுபவித்து உலகோருக்குப் பத்ர பூதியின் பெருமையை வெளிப்படுத்த அவர் நிகழ்த்திய திருவிளையாடலே இது என்று கூறலாம்.
விபூதியே கூலி
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த ஸ்ரீலஸ்ரீ தேசிகமூர்த்தி தம்பிரானவர்கள் செந்தூர் மேலக் கோபுரத்தை நிர்மாணித்தார். பொருள் பற்றாக் குறை ஏற்படவே, கூலியாட்களுக்குக் கூலிக்குப் பதிலாக இலை விபூதியைக் கொடுத்து, தூண்டுகை விநாயகர் கோயிலைத் தாண்டிச் சென்றபின் திறந்து பார்க்கும்படிக் கூறினாராம். அதன்படி திறந்து பார்த்தபோது, தத்தம் வேலைக்குரிய கூலி வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து மெய் சிலிர்த்தனர் என்கிறது கோயில் வரலாறு.
திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் பாடிய பகழிக் கூத்தர் வாழ்விலும் இலை விபூதி பெரும் அற்புதத்தை நிகழ்த்தியது. தீராத வயிற்று வலியால் துடித்த அவரது கனவில் கோயிலில் பூஜை செய்யும் உரிமையுடைய திரிசுதந்திரர் போல ஒருவர் தோன்றினார்.
"என் புகழைப் பிள்ளைத் தமிழால் பாடு, உன் நோய் குணமாகும்" என்று கூறி இலை விபூதியைக் கையில் கொடுத்திட்டு மறைந்தாராம். உரையாசிரியர் குகஸ்ரீ ரசபதி அவர்கள், திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ் உரையில் இதுபற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
கந்தர் கலி வெண்பா பாடிய குமரகுருபரரின் சரித்திரத்தை எழுதியருளிய வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள், செந்தூர் ஆலயத்தில் அர்ச்சகர்கள் இலை விபூதிப் பிரசாதத்தை எடுத்து வழங்குவதைக் குமரகுருபரர், தான் கண்டபடி அழகாகப் பாடியுள்ளார்.
"இலையமில் குமரவேள் முன் வணங்குவார்க்கு என்றும் துன்பம்
இலை.அடுபகை சற்றேனும் இலை.படுபிணி நிரப்பும்
இலை,அளற்றுழன்று வீழ்தல் இலை,பல பவத்துச் சார்பும்
இலை என இலை விபூதி எடுத்தெடுத்துதவல் கண்டார்"
என்று பாடுகிறார்.
விபூதியின் மகிமையைப் பாடவந்த அருணகிரிநாதரும்,
"ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் என்றுபூதி
ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடும் அடியார்கள்
பதமே துணையதென்று..."
என்று பாடுகிறார். நாமும் "ஆறுமுகம்" என்று ஆறு முறை ஓதி இலை விபூதியைத் தரித்து செந்திலாண்டவன் திருவருளுக்குப் பாத்திரமாவோமாக.

நவபிருந்தாவனம்

நிம்மதி தரும் நவபிருந்தாவனம்,ஆந்திரமாநிலம்

தமிழ்நாட்டில் நாகர்கோவில் டூ மும்பை எக்ஸ்பிரஸில் மந்திராலயம் செல்ல பயணச்சீட்டு எடுக்க வேண்டும்.மந்திராலயம் இறங்கினால் அங்கு மட்டுமே தங்கும் வசதிகள் உள்ளன.அங்கிருந்து 6மணி நேரம் பேருந்து பயணம் சென்றால் நவபிருந்தாவனம் சென்றடையலாம்.துங்கபத்ரா நதிக்கரையில் நவபிருந்தாவனம் அமைந்துள்ளது.இங்கு 9 மகான்கள் ஜீவ சமாதியடைந்துள்ளனர். இந்த இடம் ஒவ்வொரு யுகத்திலும் சில வரலாற்றுச் சம்பவங்கள் நிகழ்ந்த இடமாக உள்ளது.அது பற்றி விரைவில் முழுத்தகவல்களுடன்!

ஒருமுறை சென்று வந்த சில வாரங்களில் உங்களது நீண்ட கால பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன.இந்த அனுபவம் பல ஆயிரம் தமிழ்மக்களுக்கு கிடைத்துள்ளது.

இன்னும் சுலப வழி என்னவென்றால் இந்த புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து உங்கள் வீட்டுப் பூஜை அறையில் வையுங்கள்.தினமும் இந்த புகைப்படத்திற்கு தனியாக நெய்தீபம் ஏற்றி வாருங்கள்.45 நாட்கள் இப்படி செய்து வந்தால் மள மளவென உங்கள் பிரச்னைகள் தீர்வதை உணரலாம்.
உங்கள் பிரச்னைகள் தீர்ந்தால்,இந்த புகைப்படத்தை 10 நகல்கள் எடுங்கள்.உங்கள் வார்த்தைகளுக்கு யார் மதிப்பு தருகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் தலா ஒரு நவபிருந்தாவனம் புகைப்படம் தருக!
எல்லோரும் நிம்மதியாக வாழ்வோம்.இலங்கைத்தமிழர்களும்,மலேசியத்தமிழர்களும்,காஷ்மீர் பண்டிட்களும் நிம்மதியாக வாழ நவபிருந்தாவனத்து மகான்களை பிரார்த்திப்போம்.
திருச்சிமுதல் ஓசூர் வரை வாழும் வட தமிழகத்து மக்கள் பெரும்பாலானோர் டூரிஸ்டாக நவபிருந்தாவனம்,அஹோபில மடம், மந்திராலயம் சென்று வருகின்றனர்.இம்மூன்றும் மிக புனிதமான ஆலங்களாக முக்கோணதூரத்தில் அமைந்துள்ளது.
மந்திராலயம் ஸ்ரீஇராகவேந்திரர் மகானுடைய ஜீவ                      
[08:06, 10/27/2016] +91 99623 83754: நவபிருந்தாவத்தை தரிசனம் செய்யும் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளைக் காணலாமா?

1. நவ பிருந்தாவனம் தீவு பகுதிக்குள் உணவு, தின்பண்டப் பொருள்களை கொண்டு சென்று உண்ணக் கூடாது.

2. இந்த தீவைச்சுற்றியுள்ள நீரில் வாய் கொப்பளிப்பது, முகம் கழுவுவது கூடாது.

3 எக்காரணம் கொண்டும் குளிக்காமல் நவபிருந்தாவனம் வளாகத்திற்குள் நுழையக்கூடாது.

4. லுங்கி, பேண்ட அணிந்து கொண்டு உள்ளே செல்வது கூடாது. வேஷ்டி, துண்டு அணிந்து செல்வது சிறந்தது.

5. பெண்கள், குளித்தபின், தலையை விரித்த நிலையில் உள்ளே செல்லக் கூடாது.

6. நவபிருந்தாவனத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் மஞ்சள் கோட்டைத் தாண்டி உள்ளே செல்லக் கூடாது.

7. நவபிருந்தாவனங்களை எந்தக் காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது.

8. 11 விளக்குகளை அரங்கநாதர் சன்னதியில் ஏற்றி வழிபட்டு 11 முறை நவபிருந்தாவனங்களை வலம் வரலாம்.

9. அங்கப்ரதக்ஷணம் செய்யக்கூடாது.

10. உப்பு, மிளகு முதலியவற்றை பிருந்தாவனங்களின் முன்பு சமர்பிக்கக்கூடாது. கற்பூரமும் ஏற்றக்கூடாது.

ஏனென்றால் இம்மகான்கள் எல்லாம் பரம வைராக்கிய புருஷர்கள், ஆச்சார அனுஷ்டானங்களில் கண்டிப்பானவர்கள், எனவே அங்குள்ள தெய்வீக நிலை பாதிக்கப்படாமல் அமைதியுடன் வழிபட்டு வருவது பக்தர்களாகிய நமது கடமையாகும் என்று திரு. ஏ.ஏம். இராஜகோபால் அவர்கள் பக்தர்களின் நன்மையை உத்தேசித்து இவ்விதிமுறைகளை தொகுத்துள்ளார். நாம் நவபிருந்தாவனம் செல்வது நமது துன்பங்களை தொலைத்து நன்மை பெற செய்யக் கூடாத செயல்களை செய்து மேலும் பாவங்களை நாம் அதிகப்படுத்திக்கொள்ளகூதாது என்பதற்காகவே இந்த விதிமுறைகள் என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். எந்த விதத்ததிலும் ஆழ்ந்த தியானத்தில் உள்ள மகான்களின் தியானத்திற்கு எந்த விதமான பங்கமும் வராதவாறு தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.

நான்கு தூண்களுடன் வியாஸராஜர் பிருந்தாவனம்

இனி நவபிருந்தாவனங்களின் அமைப்பைப் பார்ப்போமா, அவதாரத்ரய அனுமனின் ஆலயத்திற்கு நேர் எதிரே நடுநாயகமாக ஸ்ரீ வியாஸராஜரின் பிருந்தாவனம் அமைந்துள்ளது. ஏனென்றால் இந்த இடத்தில்தான் ஸ்ரீபிரஹலாதன் தவம் செய்திருக்கின்றார். இவருக்கு வலப்புறம் இவரது சீடர்கள் மற்றும் இவருக்குப்பின் பிருந்தாவனஸ்தரானவர்கள் பிருந்தாவனங்கள் உள்ளன. இவருக்கு இடப்புறம் இவருக்கு முன் பிருந்தாவனஸ்தர் ஆனவர்களின் பிருந்தாவனங்கள் அமைந்துள்ளன. இந்த பிருந்தாவனங்களில் வியாஸராஜரின் பிருந்தாவனத்தின் முன் நான்கு தூண்கள் உள்ளன. அவரது பிருந்தாவனத்தின் நான்கு பக்கங்களிலும், சீதாராமர், லக்ஷ்மணன், அனுமன் வியாஸராஜர் சிற்பங்கள் உள்ளன. பீடத்தில் யாணை சிற்பங்கள் உள்ளன.

இரண்டாவது பிருந்தாவனத்தில் ஒரு போர் வீரனும் சந்நியாசியும் சிற்பமாக உள்ளனர். ஸ்ரீஜய தீர்த்தர் தோண்டுபந்த் என்று வீரனாகவும், சந்நியாசியாகவும் உள்ளதை இது குறிக்கின்றது என்பார் ஒரு சாரார். இல்லை ஸ்ரீரகுவீர்யரை ஒரு சமயம் ஒரு மிலேச்சன் துரத்தி வந்ததை இது குறிக்கின்றது என்பது இன்னொரு சாரார் வாதம். ஒன்பதாவது பிருந்தாவனமான கோவிந்த ஒடையரின் பிருந்தாவனம் பத்மநாப தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கு பக்கத்தில் உருவில் மிக சிறிய பிருந்தாவனமாக விளங்குகின்றது. இவரது பிருந்தாவனத்தில் சன்னியாசி, அனுமன், வீரன் சிற்பங்கள் உள்ளன. நவ பிருந்தாவனத்திற்கு செல்லும் அன்பர்கள் பூஜைக்கு வேண்டிய விளக்கு நெய், திரி முதலியவற்றை தாங்களே எடுத்து செல்லவேண்டும் அங்கு கிடைக்காது.

எல்லோரும் தங்கள் பிரார்த்தனைகளை செலுத்திவிட்டு வரும் வரை அங்கே அமர்ந்து மகான்களில் அருள் மழையில் நனைந்து மிகவும் நிறைவான மனதுடன் இன்னும் பலமுறை தங்கள் அனைவரையும் சேவிக்கும் பாக்கியம் அருள வேண்டும் என்று வேண்டிக்கொண்டே வெளியில் வந்து படகில் ஏறி துங்கபத்ரையை கடந்து ஆனேகுந்தி

முருகா

முருகா என்றால்,

முருகப்பெருமான் அருளைப் பெற்று போலி வேடதாரிகளை இனம் கண்டு தெளிவடையுங்கள். உங்கள் வீட்டு பூசைஅறையில் முருகப்பெருமான் படம் ஒன்றை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் தீபமேற்றி காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்தில் “ஓம் சரவணபவ” என்ற சடாட்சர மந்திரமாகிய முருகனின் நாமத்தை குறைந்தது 108 முறைகளாவது மனம் உருகி மந்திர உரு ஏற்றுதல் (ஜெபித்தல்) வேண்டும். அப்படி தொடர்ந்து ஜெபிக்க ஜெபிக்க உண்மை ஆன்மீகவாதிகளது தன்மைகளையும், போலி ஆன்மீகவாதிகளின் தன்மைகளையும் அறிந்து கொள்வார்கள்.

முருகா முருகா என்றே உளம் உருகி பூசிக்க பூசிக்க முருகன் அருள் அவனுள் பெருகி உண்மை ஆன்மீகவாதியின் உயர் பண்புகளை தெரிந்து கொள்வான். போலி ஆன்மீக வாதிகளின் இழிச்செயல்களை வெட்ட வெளிச்சமாக முருகன் அருளால் கண்ணாரக் கண்டு உணர்வால் உணரப்பெறுவான்.

முருகா முருகா என்றே உருகி உருகி செபித்திட யோகமும் ஞானமும் முருகன் அருள் பெற்றவர்க்கே கைகூடும் என்றும் யோகமும் ஞானமும் முருகனே நம்மை சார்ந்து நடத்திக் கொடுத்தாலன்றி தன்முயற்சியாலோ, பிறிதொருவர் தூண்டுதலினாலோ, பயிற்சியினாலோ, செய்முறைகளினாலோ, மருந்துகளை உட்கொள்வதாலோ கண்டிப்பாக அடைய முடியாது  என்றும் உணர்வான் முருகன் நாமத்தை ஜெபித்த முருகபக்தன்.

முருகன் அருளினால் ஒருவர் மனம் உருகி முருகப்பெருமானை வணங்கி வணங்கி சற்குரு வழிகாட்டலினால் உடனிருந்து வழிநடத்தி செல்ல, முருகன் அருள் துணைவர சற்குரு உபதேசத்தினால் முருகப்பெருமானை தம்முள் வரச்செய்திட ஏராளமான தவங்களும் கணக்கிலடங்காத தானங்களும் செய்து செய்து, உலக உயிர்க்கெல்லாம் உபகாரமாய் செய்து ஜீவதயவினை பெருக்கி ஜீவதயவே வடிவினனாகிய பின்னரே சற்குரு வழிகாட்ட முருகனின் அருள்கூடி மலக்குற்றமுள்ள தேகமானது சுத்தி செய்தல் பொருட்டு யாவருக்கும் எட்டா முருகனது அருள், சற்குரு வேண்டுதலினால் இரங்கி அவனது பாவபுண்ணியத்திற்கேற்ப அவன்தன் தேகத்தினுள் பிரவேசித்து அதன் பின்னரே யோகம் நடத்தித் தரப்படும் என்ற உண்மையை உணர்வான்.

முருகா முருகா என்றே தொடர்ந்து மனம் உருகி செபித்திட செபித்திட பெரும் புண்ணிய பலமும் அருள் பலமும் கொண்டு செய்யக் கூடிய இந்த யோக நெறியை ஒன்றும் அறியாத மூட, கபட வேஷதாரிகள் எல்லாம் தாம் ஏதோ கற்றது போல நடித்து காசிற்கு ஞானத்தை விற்கின்றார்கள் பாவிகள், என்பதை உணர்வான். பொருளாசையற்ற நிலையில் அடையும் யோகத்தை பொருள் பற்றுள்ளவன் எப்படி நமக்கு கற்றுத்தர முடியும். இப்படி காசிற்கு யோகமும் ஞானமும் சொல்கிறேன் என்பவன் கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றுகின்ற கள்வன் என்பதை அறிந்து கொள்வான். அப்படிப்பட்ட பிழைப்பிற்காக, தான் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக சற்றும் ஈவு இரக்கமின்றி பொதுமக்களின் அறியாமையை, இல்லறத்தானின் பலகீனத்தை பயன்படுத்தி பணம் பறிக்கின்ற இவர்களெல்லாம் வழிப்பறி செய்கின்ற கள்வரை போன்றவர்கள். இவர்களைக் கண்டாலே பாவம், இவர் சொல் கேட்டாலே பாவமென்று உணர்ந்து போலி ஆன்மீகவாதிகளை பார்க்கவே கூச்சப்பட்டு விலகிவிடுவான். அவர்கள் சொல் கேட்கவே வெட்கப்படுவான். பாவிகளது சொல்லை தம் காதால் கேட்கமாட்டான். அந்த பாவிகளை பார்க்க விரும்ப மாட்டான் உண்மை முருகபக்தன்.

செபிக்க செபிக்க முருகனருளால் உண்மை ஆன்மீகவாதிகளை அறிந்து கடைத்தேறும் உண்மை மார்க்கம் செல்கின்ற முருகன் அருள் பெற்ற முருகபக்தன் தாம் அறிந்த உண்மையை பிறருக்கும் தம்மை சார்ந்தோருக்கும் சொல்லி அவர்களையும் முருகனது பக்திக்கு ஆளாக்கிட முனைவான் அந்த புண்ணியவான்.

போலி ஆன்மீகவாதிகளின் தீய குணங்களை, போலி ஆன்மீகவாதிகளின் பண்புகளை, இழிச்செயல்களை, அவர்களது குணக்கேடுகளை தாம் உணர்ந்ததோடு தம்மை சார்ந்தோர்க்கும் சொல்லி அவர்களையும் போலி ஆன்மீகவாதிகளிடத்து சிக்கி விடாமல் தம்மால் ஆனதை செய்வான் அந்த முருக பக்தன்.

முருகன் அருள் கூடிட, தொடர்ந்து முருகன் நாமம்தனை செபித்து வர செபித்து வர முருகபக்தனின் வேண்டுகோள் தன்னால் அவனும் அவனைச் சார்ந்தோரும் உண்மை உணர்ந்து சற்குருவை அடையாளம் கண்டு அனைவரும் சற்குரு பாதம் பற்றி, ஞானபண்டிதராம் முருகப்பெருமானின் திருவருளை பெற்றிட முருகனை முருகன் அருளால் உள்ளன்போடு வணங்கி துதித்து போற்றி, வணங்கி வணங்கி ஜீவதயவினை பெருக்கி தானதருமங்களை செய்து செய்து முருகன் அருளை சற்குரு துணையுடன் நல்வழி நடந்து
பெற்றிடுவார்கள்.

முருகனை நெஞ்சம் நெகிழ உளம் கனிய உண்மையுடன் தொடர்ந்து பூசிக்க பூசிக்க இதுவரை தம்மை வழிநடத்தி வந்த சற்குரு வேறுயாருமல்ல, நாம் முருகன்மீது செலுத்திய பக்தி விசுவாசமே நமக்கு சற்குருவாய் வந்தது என்றும், சற்குருவே முருகன் என்றும், முருகனே சற்குரு என்றும், குருவே தலைவன் என்றும், தலைவனே குருவும் ஆனான் என்றும் உணர்ந்து, தமது உள்ளம், உடல், பொருள், ஆவி அனைத்தையும் முருகன் அருளால் தாம் கண்ட அந்த உண்மை ஞானகுருவிற்கு அந்த சற்குருவிற்கு அதுவரை தம்மைக் காத்த சொற்குருவின் திருவடிகளிலே சமர்ப்பணம் செய்து அவர்தம்மிடம் தம்மை முழுமையாக சரணாகதியாக ஒப்புவித்து திருக்கூட்ட மரபினருள் தம்மையும் ஒருவனாய் சேர்த்துக்கொள்ள குருநாதர் தம் திருவடிக்கே தம்மை கொத்தடிமையாக ஒப்புவித்து குருவின் கருத்தே குருவின் சொல்லே வேதமென்றும் அவர்தம் வார்த்தையே வேதவாக்கென்றும் அவரே தன் தலைவன் என்றும் அவரே நமக்குற்ற அனைத்தும் என்றும் யாதொன்றும் வேண்டாத நிலையடைந்து குருவே அனைத்துமாகி நிற்பான் அந்த யோகநிலை எய்தவல்ல குருபக்தி விசுவாசமிக்க முருகபக்தன்.

குருபக்தியே முருகபக்தியாகி முருகபக்தியே குருபக்தியாகி இரண்டும் ஒன்றிணைந்து இரண்டற கலந்திட குருவும் சீடனும் தான்வேறு அவன் வேறின்றி மனதால் ஒன்றிணைய ஜீவதயவு பெருகி காலபரியந்தம் தொடர்ந்திட்ட தொண்டால் குருபக்தி விசுவாசத்தால் தலைவன் மனமிரங்கி அருளிச் செய்திட யோகமும் ஞானமும் அடைந்து கடைத்தேறிடுவான் தூயசீடனான அந்த முருகபக்தன்.

முருகனை வணங்க வணங்க முருகனின் அம்சமாகவே முருகன் அருள் கூடியே ஆகிடுவர். இப்படி பக்தியினால் விசுவாசத்தினால் பெற வேண்டிய யோகமும் ஞானமும் காசுக்கு கிடைக்கிறது, கற்பதற்கு எளிமையாய் இருக்கிறது என்று எண்ணி போலி ஆன்மீகவாதிகள் அந்த கபட நாடகமிடுகின்றவர்கள் தோற்ற பொலிவு காண்பித்து நடிக்கும் வேடதாரிகளிடத்து சென்று வீழ்ந்திடாமல் முருகன் மீது பக்தி செலுத்துங்கள், அவனே உங்களுக்கு உண்மை குருவை அடையாளம் காண்பிப்பான்.

 நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
 வாழ்வாரின் வன்கணார் இல்.
- திருக்குறள் - கூடா ஒழுக்கம் - கவி எண் 276.

என்று வள்ளுவப்பெருமான் கூறியதை போன்று இரக்கமற்ற அந்த பாவிகளை வாழ்வினில் இனி ஒருபோதும் காணமாட்டான் உண்மை முருகபக்தன்.

போற்றுவோம் முருகப்பெருமான் திருஅருளை!
பெறுவோம் உண்மை குருவின் உயர் நட்பை!
-சுபம்-

காயத்ரி மந்திரம் உடலை இயக்கும் ஒரு ஜிம் (GYM)

காயத்ரி மந்திரத்தினைப் பற்றி சுவாமி விவேகானந்தர் குறிப்பிடும் பொழுது., "மந்திரங்களின் கிரீடம் காயத்ரி மந்திரம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜேபிஎஸ் ஹால்டேன் என்ற பிரபல விஞ்ஞானி (1892—1964) காயத்ரி மந்திரத்தினைப் பற்றி குறிப்பிடும் பொழுது காயத்ரி மந்திரம் ஒவ்வொரு இரசாயன கூடங்களின் வாயில் கதவிலும் காயத்ரி மந்திரம் பொறிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் "நதிகளில் நான் கங்கையாகவும., மலைகளில் நான் விந்திய மலையாகவும்., மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரமாகவும் இருக்கின்றேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி இராமகிருஷ்ண பரமஹமஸர் கூறுகையில் "பெரிய பெரிய கடுந்தவ முயற்சிகளில் மனிதர்கள் ஈடுபடுவதனைக் காட்டிலும்., காயத்ரி மந்திரத்தினை ஜபிப்பது மிகப்பெரிய சாதனையாகும். இது மிக சிறிய மந்திரம்தான். ஆனால், மிக மிக சக்தி வாய்ந்தது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரபல மேலை நாட்டு ஞானி ஆர்தர் கொயெஸ்ட்லர் "காயத்ரி மந்திரம் 1000 ஆட்டம் பாம்களுக்குச் (Atom Bomb) சமம்" எனக் குறிப் பிட்டுள்ளார்.

ஜெர்மன் தத்துவ ஞானி மெக்ஸ் முல்லர் (1823—1900) அவர்கள் "ஒளியினை தவம் செய்து நம் மூளை., மனதினை உயர்த்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தி (1869—1948) அவர்கள் "யார் ஒருவர் காயத்ரி மந்திரத்தினை ஜபிக் கின்றாரோ அவன் நோய்க்கு ஆளாக மாட்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயத்ரி மந்திரத்தினை சொல்லுவதன் பொருள் "உயர் அறிவு சக்தியினை அளித்து, அறியாமையை நீக்க வேண்டும்" என்பதாகும்.

இம்மந்திரம் சொல்லப்படும் பொழுது எழும் அதிர்வுகள் உடலில் 24 சுரப்பிகளை ஊக்குவிக்கின்றது. இதன் காரணமாக 24 வகை சக்திகள் உடலில் உண்டாகின்றன.
காயத்ரி மந்திரத்திற்கு ஜாதி., மதம் என்ற எந்த பிரிவும் கிடையாது.

தத் — வெற்றி
ச — வீரம்
வி — பராமரிப்பு
து — நன்மை
வ — ஒற்றுமை
ரி — அன்பு
நி — பணம்
யம் — அறிவு
ஃபர் — பாதுகாப்பு
க்கோ — ஞானம்
த்தி — அழுத்தம்
வா — பக்தி
ஸ்யா — நினைவாற்றல்
ஃத்தி — மூச்சு
மா — சுய ஒழுக்கம்
யோ — விழிப்புணர்வு
யோ — உருவாக்குதல்
நஹ — இனிமை
பரா — நல்லது
சோ — தைரியம்
த்தா — ஞானம்
யட் — சேவை

காயத்ரி மந்திரம் என்றால் என்ன..?

வேதத்திலிருந்து வந்த அனைவருக்கும் பொதுவான மந்திரம் தான் காயத்ரி மந்திரம்.
ஓம் — தெய்வீக சக்தி, ஒலி சின்னம்
ப்பூ — உடல் விமானம்
புவஹா — நிழலிடா விமானம்
ஸ்வ — வான விமானம்
தத் — அந்த தலை தெய்வத்தின்
ஸவித்து — பிரபஞ்சம் தயையும் சக்தி
வரேன்யம் — வணங்க வேண்டும்
பர்கோ — பிரபல
தேவஸ்ய — பிரகாசமிக்க
தீமஹி — நம் த்யானம்
தியோ — அறிவினை
யா — யார்
நஹ — எங்கள்
ப்ரசோதயாத் — தெளிவுப்படுத்துங்கள்

"ஓம் பூர் : புவ : ஸீவ :
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ : யோந: ப்ரசோதயாத்"

நம் புத்தியை இயங்கச் செய்யும் பரமாத்மாவை நாம் வணங்குவோம் என்பது சுருக்கமான பொருள்.

இம் மந்திரம் ரிஷி விஸ்வாமித்திரரால் கண்டுபிடிக்கப்பட்டது. சூரிய பகவானை நோக்கி வழிபடுவதாக இம் மந்திரம் அமைந்துள்ளது. மிக அதிக சக்தி கொண்டது. அதிர்வுகள் மூலம் ஆக்கப்பூர்வ சக்தியினை ஏற்படுத்துவது. வேதங்களின் தாய் தான் காயத்ரி தேவி. இம் மந்திரம் சொல்லப்படும் இடங்களில் எல்லாம் இத்தேவி இருப்பாள். இத் தேவிக்கு சாவித்திரி., சரஸ்வதி என்ற பெயரும் உண்டு.

காயத்ரி ஐம்புலன்களின் அதிபதி. சாவித்திரி ப்ராண சக்தி. சாவித்திரி என்பது உண்மையைக் குறிக்கின்றது. சரஸ்வதி வாக்கின் அதிபதி. ஆக., உண்மையான சிந்தனை., சொல், செயல் இவற்றினை குறிப்பதாக அமைகின்றது. காயத்ரி மந்திரம் வேதத்தின் சாரம். இதனை முழு கவனத்தோடே சொல்ல வேண்டும். காலை., மாலை இருவேளையும் சொல்லலாம். அனைவரும் சொல்லலாம். ஹிருதயம் சுத்தமாகும். தீய எண்ணங்கள்., கவலைகள் நீங்கும். குறிப்பாக., பள்ளி மாணவர் திறமையாகப் படிப்பார்கள்.

காயத்ரி மந்திரம் ஜபிப்பதன் பலன்கள்

★ கம்பீரத் தோற்றம்.
★ தரமான பேச்சு.
★ வறுமை., குறை நீங்குதல்.,
★ பாதுகாப்பு வட்டம்.
★ கண்ணில் அறிவு தெரிதல்.
★ அபாயம்., தேவையற்ற சூழ்நிலை நீங்கும்.
★ நரம்புகளும்., சுரப்பிகளும் ஊக்குவிக்கப்படும்.
மேலும்.,
★ அமைதியாய் இருப்பர்.
★ நற்செயல்களில் ஈடுபடுவர்.
★ காந்த சக்தி ஆகியவை உருவாகும்.
மேலும்.,
★ வாழ்க்கையில் தடைகளை நீக்கும்.
★ மூளையை பிரகாசிக்கச் செய்யும்.
★ உள்ளுணர்வினை தெளிவாக்கும்.
★ உயர் உண்மைகள் தெரிய வரும்.
— என்றும் கூறப்படுகின்றது.

டாக்டர் ஹெவார்ட் ஸ்டியன் கெரில் என்ற அமெரிக்க விஞ்ஞானி காயத்ரி மந்திர பலன்களாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார். ஆனால்., இதற்கு மேலும் ஆதாரப்பூர்வம் தேவைப்படுகின்றது....
கடந்த சில ஆண்டுகளில் சில வெளிநாடுகளில் காலை 7 மணிக்கு சுமார் 15 நிமிடங்கள் தொடர்ந்து காயத்ரி மந்திரத்தினை ஒலிபரப்புவதாக கூறப்பட்டுள்ளது.

இம்மந்திரம் முழுக்க முழுக்க ஒளியினை வணங்குவதும்., மனதின் இருளினை நீக்க வேண்டுவதாக அமைந்துள்ளதால்., இம் மந்திரம் பெரிதும் வரவேற்கப்படுகின்றது.

ஒரு மந்திரமோ., தியானமோ., யோகவோ., உடற்பயிற்சியோ., ஆரம்பிப்பதற்கு முன்னால் உங்கள் மருத்துவர் ஆலோசனை பெறுவது அவசியம்.
ஒரு பழக்கம் உங்களை விட்டு நீங்க (உ—ம்) காபி., டீ பழக்கம் போன்றவை நீங்க 40 நாட்கள் ஆகும்.

த்யானமோ., மந்திரமோ அது பழக்கமாக ஆரம்பிக்கும் பொழுது அது உங்களுக்கு கை கூடி வர., பழக்கப்பட 90 நாட்கள் ஆகும்.

120 நாட்களில் புதுப்பழக்கம் நன்கு பழகி விடும்.

120 நாட்களில் கை விட்ட பழக்கமும் நம்மிடம் நன்கு நீங்கி விடும்.

1000 நாட்களில் நீங்கள் செய்யும் சாதனையோ., கடைப்பிடிக்கும் பழக்கமோ., அதற்கு நீங்கள் மாஸ்டர் ஆகி விடுவீர்கள். (உ—ம்) தொடர்ந்து நீங்கள் 1000 நாட்கள் காலை 4 மணிக்கு எழுந்தால்.,  வாழ்நாள் முழுவதும் அவ்வாறே செய்வர்.

★ மந்திரத்தைத் தொடர்ந்து 3 நிமிடங்கள் ஜபிப்பது உங்களைச் சுற்றியுள்ள மின்சார காந்த அலைகளை தாக்கும். ரத்த ஓட்டம் சீர்படும்.

★ ஏழு நிமிடம் தொடர்ந்து ஜபிப்பது உங்கள் மூளை செயல் திறனைக் கூட்டும். உடல் வலுவினைக் கூட்டும். உடலைச் சுற்றியுள்ள காந்த அலைகளில் நல்ல மாறுதல்கள் ஏற்படும்.

★ 11 நிமிடம் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் நரம்பு மண்டலத்திலும்., சுரப்பிகளிலும் நல்ல மாற்றத்தினை ஏற்படுத்தும்.

★ 22 நிமிடங்கள் தொடர்ந்து மந்திரம் ஜபிப்பதும்., தியானம் செய்வதும் ஒருவரின் அழிவுப்பூர்வ., ஆக்கப்பூர்வ இரண்டும் இல்லாத நிலைகளில் தடுமாறும் மனதினை நிலைப்படுத்தி தெளிவாக சிந்திக்க வைக்கும். உள் உணர்வினைக் கூட்டும்.

★ 31 நிமிடங்கள் தொடர்ந்து ஜெபிப்பது சுரப்பிகளை சீர்ப்படுத்தும். மூச்சு சீராகின்றது. அனைத்துத் திசுக்களும் சீர்படத் தொடங்குகின்றன.

★ 62 நிமிடங்கள் தொடர்ந்து ஜபிக்கும் பொழுது மூளையில் "க்ரே" பகுதியில் (Grey Matter) மாற்றம் ஏற்படுகின்றது. பிட்யூட்டரி., பீனியல் சுரப்பிகள் நன்கு இயங்குகின்றன.

★ இரண்டரை மணிநேரம் தொடர்ந்து ஜெபிக்கும் பொழுது உயர்நிலையினை மனம்., மூளை அடைகின்றது. நாள் முழுவதும் ஆக்கப் பூர்வமாகவே செயல்படுவர்.

— மேற்கூறப்பட்டுள்ள கருத்துக்கள் விஞ்ஞான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும்,, பல அனுபவ ரீதியான கருத்துக்களாக வெளியிடப்பட்டுள்ளன.
மந்திரம் சொல்வதற்கென சில முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

★ காலை 4 மணிக்கு எழுந்து நாலரை மணிக்குள் தயாராகுங்கள்....

★ கிழக்கு முகமாக அமருங்கள்.

★ ஞான முத்திரை பரிந்துரைக்கப்படுகின்றது.

★ மந்திரத்தினை பொறுமையாய் 108 முறை சொல்லுங்கள்.

மகாத்மா காந்தி அவர்கள். அவர்களது "இயற்கை வைத்தியம்" என்ற புத்தகத்தில் "ஒரு மருத்துவரின் கடமை நோயாளியின் உடலுக்கு கவனம் செலுத்துவது மட்டுமல்ல. அவரது ஆன்மாவிற்கும் கவனம் செலுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மந்திரங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள்.....

★ மகாத்மா காந்தி அவர்கள்., "ராம" நாமத்தினை பரிந்துரைக்கின்றார். மேலும் "ராம" நாமம் அனைத்திற்கும் தீர்வு என்று குறிப்பிடுகின்றார். இந்த நாமத்தினை சொல்பவர்கள் சிறிய முயற்சியிலேயே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ரா" என்பது "ஓம் நமோ நாராயணா என்பதிலிருந்தும், "ம" என்பது "ஓம் நம சிவாய" என்பதிலிருந்தும் சேர்க்கப்பட்டதால்., இரட்டிப்பு பலன் என்றும் கூறப்படுகின்றது.

★ கந்த ஷஷ்டி கவசத்தில் கூட "ரஹன பவச ரரரர., ரிஹண பவச ரிரிரிரி" என சொல்லப்படுகின்றது. "ரா" என்ற எழுத்தும் "ம" என்ற எழுத்தும் உச்சரிக்கப்படும் பொழுது உடலில் ஏற்படும் அதிர்வுகள் அவரது உடல் நலத்தினையும்., மன நலத்தினையும் காப்பதாக விளக்கப்படுகின்றது. ஆக., மந்திரங்களும் அமிர்த மருந்தே என்பதை அறிவோமாக.⁠⁠⁠⁠

கந்த சஷ்டி விரத முறை

கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.  🌸
கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை 🌸

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.  👍🏻  எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

குல தெய்வம் - முழுமையாக ஓர் அலசல்

33 கோடி தேவர்களில் குலதெய்வம் யார்
என்பதை எப்படி கண்டு பிடிப்பது?
எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எங்காவது ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அங்கு ஏதாவது விவரம் அறிந்த பண்டிதர் இருந்தால் அவர்களிடம் தெய்வ சம்மந்தமாக ஏதாவது கேட்டு தெரிந்து கொள்வது உண்டு. என்னிடம் யாராவது மாட்டிக் கொண்டு விட்டால் லேசில் விடுவது இல்லை. கேட்டு முடித்தப் பின் தட்சணையாக ஏதாவது தருவதை மறப்பதில்லை. இந்த முறையும் ஒருவர் வசமாக மாட்டிக் கொண்டார். ஒரு சமயம் ஒரு கிராமத்தில் இருந்த ஆலயத்துக்கு சென்ற இருந்தபோது அங்கு ஒரு வயதான பண்டிதர் போன்றவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தபோது குல தெய்வத்தைப் பற்றிய சந்தேகத்திற்கு விளக்கம் கேட்டேன். அவர் அதற்கு ஒரு பிரசங்கமே கொடுத்து விட்டார். அதைக் கேட்டபோது மிக அற்புதமாக இருந்தது. அதன் பிறகு நாங்கள் ஆலயத்தை சுற்றி விட்டு வந்தபோது அவரை அங்கு காணவில்லை. நான் தவறு செய்துவிட்டதாகத் தோன்றியது. அவர் பெயரையோ, எங்கு இருக்கின்றார் என்பதையோ கேட்டுக் கொள்ளவில்லை. அங்கும் இங்கும் தேடியும் அவரைக் காணவில்லை. எனக்காகவே அவர் அங்கு வந்திருந்தது போல இருந்த அவர் யார்? தெரியவில்லை, ஒரு கனவு போல வந்தார், சென்றார் என ஆகிவிட்டது. ஆனால் குலதெய்வம் பற்றி அவர் கொடுத்த பிரசங்க விளக்கமே சரியானதாக இருந்தது . பண்டிதர் கொடுத்த தகவல் இது:

குல தெய்வம் யார் எனத் தெரியாதவர்கள்
என்ன செய்ய வேண்டும்?
'' முன் காலத்தில் சில கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு பூமியில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து மஞ்சள் குங்குமம் இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது என்பது தெரியாததினால் உருவமற்ற அதை ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறையக் கிடைக்கும் என்பதினால்) சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவி களி மண்ணால் செய்த பிள்ளையார் பிடியைப் போன்ற அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே தமது குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் ஆணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண்ணான குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு அதை செய்வார்கள் . பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதிக் கொண்டு ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள். அதையே தமது குல தெய்வமாக வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குலதெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது''

எப்படி களிமண் உருவை படைத்து அதை பூஜித்தார்கள் என அவர் கொடுத்த விவரத்தை மேலே உள்ள படத்தில் கொடுத்து உள்ளேன் . அவர் மேலும் கூறுகையில் 'ஒரு தவறை செய்யக்கூடாது' என எச்சரித்தார்.

''பூமியில் இருந்து எடுத்த களி மண்தானே என அதை அலட்சியப்படுத்தி விடக் கூடாது. எப்போது அந்த மண் பிடியை குல தெய்வத்தின் உருவம் என்று கருதி பூஜிப்போமோ அப்போதே அதில் நம்மை அறியாமல் நம்முடைய குல தெய்வங்கள் வந்து குடியேறும். ஆகவே அதை தமது குல தெய்வம் அடையாளம் தெரியும் வரை பத்திரமாக, உடையாமல் பாதுகாத்து வர வேண்டும். தேவை என்றால் தெய்வங்களை வைத்து உள்ள இடத்திலோ, பூஜை அறையிலோ ஒரு சிறிய பிளாஸ்டிக் பெட்டியிலாவது வைத்து அதை பத்திரமாக வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் அதற்கு தினமும் ஒரு பூவாவது, அது முடியவில்லை என்றால் அதன் பீடத்தில் சிறிது குங்குமத்தையாவது தூவி ' குல தெய்வமே, எனக்கு உன்னை அடையாளம் காட்டுவாயா' என பிரார்த்தனை செய்து வணங்கி வர வேண்டும். வேறு எந்த பூஜையும் செய்யத் தேவை இல்லை. ஆனால் நிச்சயமாக அவரவர் பிராப்தம் போல எப்போது அவர்களுக்கு தன்னைப் பற்றிய விவரம் தெரிய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுமோ அப்போது அவர்களுக்கு குல தெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் என்பதில் சற்றும் சந்தேகம் கிடையாது. எப்போது அவர்கள் தமது குல தெய்வத்தை அடையாளம் கண்டு கொள்கின்றார்களோ அதன் பின் அவர்கள் எப்போது அந்த ஆலயத்துக்கு செல்வார்களோ அப்போது தமது குல தெய்வமாக வணங்கி வந்த மண் பொம்மையை எடுத்துக் கொண்டு அந்த ஆலயத்தில் குல தெய்வத்தை வணங்கியப் பின் ஆலய ஸ்தல விருஷத்தின் கீழ் அல்லது ஆலயத்திலேயே ஏதாவது ஒரு மூலையில் அந்த பொம்மையை வைத்துவிட்டு வருவார்கள். அல்லது ஆலயத்தில் குளம் இருந்தால் அந்த நீரில் அதைப் போட்டு விட்டு வருவார்கள்'' . என்று கூறினார். குல தெய்வம் என்பது எத்தனை ஜென்மங்களுக்குப் பொருந்தும், வம்சக் கணக்கு என்பது என்ன என்ற கேள்வி எழுந்தபோது அவர் கூறிய கீழே தந்துள்ள விவரங்கள் ஆச்சர்யமாக இருந்தன.

குல தெய்வம் எத்தனை ஜென்மங்களுக்கு
ஒரு வம்சத்தைக் காப்பாற்றும்?
சாதாரணமாக ஏழேழு ஜென்மங்களுக்கும் குலதெய்வம் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை. ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள் என்பது ஒரு கணக்கு. 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13 . இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண். ஒருவர் இறந்து விட்டால் பதிமூன்றாம் நாள் அன்று கிரேக்கியம் என்ற நல்ல காரியத்தை செய்வது பழக்கம். அன்றுதான் உடலை விட்டு வெளியேறிய ஆத்மா சொர்கத்தை அடைகின்றது என்று நம்புகிறோம்.
அது போலத்தான் இறுதிக் காலமாக 13 என்ற அந்த காலத்தைக் குறிக்கும் விதத்தில் 49 ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது . அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்க மாட்டார்கள். ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13 ஜென்மத்துக்கு - வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும் என்று கூறுகிறார்கள்.

வம்சக் கணக்கு என்பது என்ன?
வம்சம் என்பது எப்படி கணக்கிடப்படுகின்றது? ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும். யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? அதை விட சிறிய கேள்வி, யாருக்காவது அவர்களுடைய குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? இதையெல்லாம் யார் குறித்து வைத்துக் கொண்டு வருகிறார்கள்? அதனால்தான் ஒரு குல தெய்வம் ஏழேழு ஜென்மம் அதாவது 49 ஜென்மங்களுக்கு அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.
மகள் என்பவள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க பாத்யதை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.

பலருக்கு குல தெய்வம் யார் என்பது
ஏன் தெரியாமல் உள்ளது?
இதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் ஏற்பட்ட சாபம் அல்லது முன்னோர்கள் செய்த அலட்சியமே காரணம் . முன்னர் எல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள் தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குல தெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்து விட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும் குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள். தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குல தெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குல தெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.

ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். தங்கும் இடமே என்ன என்பது தெரியாதபோது குல தெய்வத்தின் நினைவு அவர்களுக்கு எப்படி இருக்கும். குல தெய்வத்தின் படம் கூட அவர்களிடம் இருக்காது. திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும் கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகி விட்டது. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை. குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குல தெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்கு போல பழனி, திருப்பதி அல்லது வைதீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டு விட்டு வந்து விடுவார்கள்.
அது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் தமக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு முடிவு தேட புதுப் புது சாமியார், சன்யாசிகள் மற்றும் தெய்வப் பிறவிகள் என ஓடுகிறார்கள். அவர்கள் கூறுவதை செய்வார்கள். ஆனால் தம்முடைய குல தெய்வத்தை நினைக்க மாட்டார்கள். அதற்கு மேலும் அந்த சாது, சன்யாச, தெய்வப் பிறவிகளும் முதலில் உங்கள் குல தெய்வத்திற்கு பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற நியதியை அறிவுறுத்த மாட்டார்கள். அப்படி செய்தால் அவர்கள் என்ன ஆவது ?

இப்படி எல்லாம் இருப்பதினால்தான் குல தெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், அப்போது தம்மையே அறியாமல் ஒரு சடங்கு போல வீட்டில் நடக்கும் அனைத்து பூஜை, பண்டிகைகளையும் கொண்டாடும்போது தாம் குல தெய்வத்தை மறந்து விட்டோமே என்ற எண்ணம் இருப்பது இல்லை. அப்படி செய்யும் தவறு தெரிவது இல்லை. என்னதான் எந்த ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும் குல தெய்வத்தை மறப்பது பெற்றோர்களையே மறப்பது போன்றதே என்ற தவறு தெரிவது இல்லை. அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகி விட அது அவர்கள் வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது. அந்த குல தெய்வ சாபம் அந்த குடும்பத்தினருக்கு தொடரும்.

இந்த விவரங்கள் எத்தனை பேருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு கிடைத்த தகவலை எப்போதும் போலவே அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள இங்கு பிரசுரித்துள்ளேன்..

குமரிக்கண்டம்

மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது .

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான்"நாவலன் தீவு"என்று அழைக்கப்பட்ட"குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை,மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்"குமரிக்கண்டம்".ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு,ஏழுகுன்ற நாடு,ஏழுகுனக்கர
ை நாடு,ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது !! பறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!.குமரிக்கொடு,மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது !!. தென்மதுரை,கபாடபுரம்,முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான். நக்கீரர்"இறையனார் அகப்பொருள்"என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள"தென் மதுரையில்"கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39மன்னர்களும் இணைந்து,"பரிபாடல், முதுநாரை,முடுகுருக்கு,கலரியவிரை, பேரதிகாரம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது .இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்"கபாடபுரம்"நகரத்தில் கி.மு 3700இல் 3700புலவர்கள்களுடன்"அகத்தியம்,தொல்காப்பியம்,பூதபுராணம்,மாபுராணம்"ஆகிய நூல்களை இயற்றப்பட்டது . இதில்"தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய"மதுரையில்"கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன்"அகநானூறு, புறநானூறு,நாலடியார், திருக்குறள்"ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது வேதனையான விஷயம் !!!!..இந்திய அரசு வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம் ,இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் ,நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.வரலாற்று தேடல் தொடரும்.........!!
தமிழ் மொழி என்றும் வாழிய வாழியவே !
இது போன்ற தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தயக்கம் வேண்டாம் தோழர்களே !
முடிந்தவரை அனைவரும் இதனைப் படித்துவிட்டு நண்பர்களுடன் உடனே பகிர்ந்து கொள்ளுங்கள் !
நம் பக்கத்தில் இருக்கும் 500 மேற்பட்ட நண்பர்களில் குறைந்தப்பட்சம் ஐம்பது பேராவது இதனைப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் !
தம்மைத் தமிழன் என்று எண்ணுபவன் எல்லாமே இதனைக் கண்டிப்பாகப் பகிர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன் .
நன்றி !

Human Body is Temple


Kumarasthavam



பிருகு முனிவர் கூறிய விநாயகர் மந்திரம்

பிருகு முனிவர் கூறிய விநாயகர்
மந்திரம் –
~~~~~~~~~
ஓம் சுமுகாய நம
ஓம் ஏக தந்தாய நம
ஓம் கபிலாய நம
ஓம் கஜகர்ணகாய நம
ஓம் லம்போதராய நம
ஓம் விநாயகாய நம
ஓம் விக்கினராஜாய நம
ஓம் கணாத்பதியே நம
ஓம் தூமகேதுவே நம
ஓம் கணாத்ய க்ஷசாய நம
ஓம் பாலசந்திராய நம
ஓம் கஜானனாய நம
ஓம் வக்ரதுண்டாய நம
ஓம் சூர்ப்பகன்னாய நம
ஓம் ஏரம்பாய நம
ஓம் ஸ்காந்த பூர்வாய நம!
பிருகு முனிவர் கூறிய இந்த அற்புத விநாயகர் மந்திரத்தை 21 முறை கூறினால் எந்த பிரச்சனையையும் தீர்க்கும்.

ஓம் சிவ சிவ ஓம்

சிவ சிவ என்கிலார் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினைமாளும்
சிவ சிவ என்றிட தேவருமாவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே.


இது திருமூலர் சித்த தெய்வத்தின் திருமந்திரம்.  இதை அனைவரும் அறிவர்.  இதில் சிவ சிவ என்பது சிவநெறி செல்வர்களால் பெருமையாக அழைக்கப்படும் காரணப் பஞ்சாட்ரம் ஆகும்.

நமசிவய - ஸ்தூல பஞ்சாட்சரம் (உடல் திருவைந்தெழுத்து)

சிவயநம - சூட்சும பஞ்சாட்சரம் (உயிர் திருவைந்தெழுத்து)

சிவய சிவ சிவ - அதிசூட்சும பஞ்சாட்சரம் (கடி உயிர் திருவைந்தெழுத்து)

சிவ சிவ - காரண பஞ்சாட்சரம் (தோற்ற திருவைந்தெழுத்து)

மேற்கண்ட திருமந்திரத்தின் பொருள்:-

தீவினையாளர் (பாவம் செய்தவர்கள்) சிவ சிவ என்று செபிக்க மாட்டார்கள்,  செபிக்கமுடியாது.  அவரவர் செய்த தீவனைகள் செபிக்கவிடாமல் தடுக்கும்.  அவ்வாறு செபித்து வந்தால் தீவினைகள் யாவும் (மூட்டை மூட்டையாக இருந்தாலும்) அழிந்து போகும்.  தீவினைகள் அகன்றால் பிறவி நிலையில் மேன்மை பெற்று மனிதப்பிறவியிலிருந்து தேவராக (சிவகணமாக) மாறமுடியும்.  அவ்வாறு மேன்மை பெற்று சிவகணமாகி முக்தி பெற்று சிவகதியை (சிவனுள் ஒடுங்குதல் - பிறவியிலா பெருநிலை) அடையமுடியும்.

இது சிவ சிவ என்ற மந்திரத்தின் விளக்கம் மட்டுமே.  ஒவ்வொரு சித்தர்களுக்கும் மூலமந்திரங்கள் உண்டு.  அவையாவன:-

1. நந்தீசர் ------  சும்

2. போகர் ------  சம்

3. அகத்தியர் ------ ஞாம்

4. கொங்கணர் ------- ணம்

5. சட்டைமுனி ------- டம்

6. சுந்தரானந்தர் ------ நம்

7. ராமதேவர் ------- தம்

8. கருவூரார் ------ பம்

9. பிரம்மமுனி ------ மம்

10. ரோமர் ------ ரம்

11. மச்சமுனி ------ யம்

12. புண்ணாக்கீசர் ------ வம்

13. இடைக்காடர் ------- லம்

14. கோரக்கர் ------- ளம்

15. வாசமுனி ------- றம்

16. கமலமுனி ------ ழம்

17. அழுகண்ணி சித்தர் ------ னம்

18. திருமூலர் ------ ஓம்

இம்மூலமந்திரங்களில் திருமூலர் சித்த தெய்வத்தின் மூலமந்திரம் ஓம் ஆகும்.

ஓம் சிவ சிவ ஓம் :-

ஓம் --- ஓரெழுத்து மந்திரம் (இரு முறை) --- இரு எழுத்துக்கள்

சிவ --- ஈரெழுத்து மந்திரம் (இரு முறை) --- நான்கு எழுத்துக்கள்

ஆக மொத்தம் ஆறு எழுத்துக்கள் (சிவம் - 5 + சக்தி - 1). சிவனும், சக்தியும் சம அளவில் கலந்த அற்புத மந்திரம் தான் ஓம் சிவ சிவ ஓம்.  சிவ சிவ - சந்நியாசிகளுக்கு மட்டுமே உரித்தானது (சிவ தத்துவம் மட்டும் தனித்திருப்பது).  ஓம் என்ற மந்திரமே அனைத்து மந்திரங்களுக்கும் சக்தி தருவது.  சக்தியின் வடிவுடையது.  ஆதிசக்தியை குறிப்பது.  ஓம் சிவ சிவ ஓம் --- இல்லற நெறியாளர்களுக்கு உகந்தது (சிவ சக்தி தத்துவமானது).  சிவசக்தி தத்துவமே குமரக்கடவுள் (ஆறுமுகம் - ஆறு எழுத்துக்கள்).  சிவசக்தி வடிவமே உலக தத்துவம்.  இதுவே லிங்க யோனி தத்துவம்.  சிவனும் சக்தியும் இணைந்தால் தான் உலக இயக்கம்.

திருமூலரின் மூலமந்திரம் - ஓம்

திருமூலர் அருளிய மந்திரம் - சிவ சிவ

இதை சம அளவில் சேர்ப்பதால் கிடைப்பதே ஓம் சிவ சிவ ஓம்.

தமிழ் மெய்யெழுத்துக்கள் --- 18

சித்தர் ஏடுகளில் கூறப்பட்ட சித்தர்களின் மூலமந்திரங்கள் --- 18

அவற்றுள் முதல் (சும் --- நந்தீசர்) மற்றும் கடைசி (ஓம் --- திருமூலர்) இவற்றை நீக்கி கம் மற்றும் ஙம் இவற்றை சேர்க்க கிடைப்பது உயிர்-மெய் வரிசை (கம், ஙம், சம்,.......,னம்) மொத்தம் - 18.  இவற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட மூலமந்திரம் --- கம் (கணபதியின் மூலமந்திரம்).  கணபதியும் ஒரு சித்தர் தாம்.  அவரது சமாதி இமயமலை சாரலில் உள்ளதாக படித்திருக்கிறேன். அவ்வாறெனில் ஙம் என்ற மந்திரம் ஆதி சித்தர் காகபுசுண்டர் சித்தர் பெருமானின் மூலமந்திரமாக தான் இருக்க முடியும்.

ஆறு ஆதார தியான மந்திரங்கள்:

மூலாதாரம் --- கணபதி --- ஓம் சிவா

சுவாதிட்டானம் --- பிரம்மா --- நம் சிவ ஓம்

மணிபூரகம் --- விஷ்ணு --- மங் சிவ ஓம்

அநாகதம் --- ருத்திரன் --- சிங் சிவ ஓம்

விசுத்தி --- மகேஸ்வரன் --- வசி சிவ ஓம்

ஆக்ஞை --- சதாசிவம் --- யம் சிவ ஓம்

என்ன வியப்பு...!  மேற்கண்ட ஆறு ஆதார தியான மந்திரங்களிலும் நம்முடைய ”ஓம் சிவ சிவ ஓம்” மந்திரம் ஒளிந்துள்ளது.



தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்